செல்வத்தை விடக் குழந்தைச் செல்வமே பிரதானம்
நம் வாழ்வில் எவ்வளவு சொத்து இருந்தாலும், வசதிகள் இருந்தாலும், வாழ்வு முழுமை அடையுமா? கண்டிப்பாக கிடையாது என்பது தான் உண்மை.
அந்த வசதி வாய்ப்புகளையும், செல்வங்களையும் அனுபவிக்க குழந்தை செல்வம் தேவை. அதனால்தான் குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார்.
பாக்கியத்திற்கே பாக்கியமான புத்திரஸ்தானம்
கால புருஷ ராசிப்படி பாக்கியத்திற்கு அதிபதியாக குருபகவான் விளங்குகிறார்.
ஒரு ஜாதகரின் பாக்கியம் என்பது வெறும் சொத்துக்கள் மட்டும் அல்ல. அந்த பாக்கியத்திற்கே பெரும் பாக்கியமாக விளங்குவது புத்திரஸ்தானம் தான்.
2026 குருப்பெயர்ச்சி தேதிகள் மற்றும் உச்ச பலம்
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, குரு பகவான் மிதுன ராசியிலிருந்து தனது உச்ச வீடான கடக ராசிக்கு 2026 மே 26ம் தேதியும் பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணித பஞ்சாங்கம் படி ஜூன் 2, 2026 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
கடக ராசியில் குரு பகவான் உச்ச பலம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உச்ச பெயர்ச்சி காலத்தில் குருவின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
12 ராசியினரும் செய்ய வேண்டிய வழிபாடுகள்
இந்த நாளில் ஆலயம் சென்று 12 ராசிக்காரர்களும் குரு பகவானை வழிபட வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
குறிப்பாக பரிகார ராசிகள் இருந்தாலும், கிரக பெயர்ச்சி காலங்களில் அனைவரும் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.




